தந்தையை இழந்து காணாமல் போன தாயுடன் உணவிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்திற்கு வருடத்திற்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டன

1 வது கட்டமாக ….

அண்மையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைய உதயம் பிரதிநிதிகளின் முயற்சியில் தந்தையை இழந்து காணாமல் போன தாயுடன் உணவிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மகன் மற்றும் ஒரே வகுப்பபை சேர்ந்த இரு மகள்களிற்கு தேவையான ஒரு வருடத்திற்கு தேவையான உணவுகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுகள் பாடசாலை அதிபரின் உதவியுடன் வழங்கப்பட்டன.இவ் உதவியினை வழங்கிய அனைத்து உள்ளங்களிற்கும் நன்றிகள்.அவர்களின் மேலதிக படங்கள் விரைவில் வழங்கப்படும் KUGAN SABARATNAM ,SOORIYAKUMARAN NALLANATHAN,BASKARAN VASUMATHY,SUNTHARALINGAM MUTHULINGAM,SATHIESSKUMAR shanmuganathan, மேலதிக energy உணவு வழங்க shanmugathas paramanantham ,Tharmalingam sunthralingam , Ragavan Kumarasamy உதயம் கனடா ஊடாக முன்வருகின்றோம் நாங்கள் உதவி செய்து பிள்ளைகளை காப்பாற்றுவோம் .

மிகவும் கொடிய சம்பவம் மனதை உருக்கியது .😭கிளிநொச்சியில் ஒரு குடும்பத்தில் தந்தை இல்லை தாயோ வேலைக்காக வெளிநாடு சென்று காணாமல் போய் விட்டார். சித்த சுவாதினமற்ற ஒரு உறவினருடன் போசாக்கற்று இருக்கும் 3 பிள்ளைகளுக்கு மாத மாதம் குறைந்தது 6 மாதங்களோ அல்லது ஒரு வருடங்களுக்கு தேவைப்படுகிறது .அவர்களின் எடை மிகவும் குறைவான நிலையில் எவ்வித உதவியும் இன்றி இருக்கிறார்கள். மூத்த மகன் ஆண்டு 9 ஆனால் வெறும் 20 கிலோ தான் . ஏனெனில் அக்குடும்ப சூழ்நிலை எம்மை கலங்க வைத்ததோடு இது வரை எத்தனையோ உதவிகள் செய்துள்ளீர்கள் அதற்கு நாங்கள் தலை வணங்குகின்றோம் .அதற்காகத்தான் அதிபர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உதவிக்கரம் தாருங்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org