ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாளாந்த கூலிதொழில்புரியும் குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாளாந்த கூலிதொழில்புரியும் குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
உதயம் கனடா நன்றி கூறுகின்றது இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்க ஒருங்கிணைப்பில் தற்போதைய கொரோணா தொற்று அனர்த்தத்தினால் தொடரும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாளாந்த கூலிதொழில்புரியும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பட்டினிநிலையினை தீர்க்கும்முகமாக 1 ம் கட்டமாக குடும்பங்களுக்கு நல்லூர் லயன்ஸ்கழகத்தின் நிதிஅனுசரணையுடன் வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து மேலும் ஊரடங்கு நீடித்த நிலையில் 2 ம் கட்டமாக நாளாந்த வருமானம் எதுவுமின்றி பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு 3 ம் கட்டமாக இன்றைய தினம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ் உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு,01) இருபாலைதெற்கு கிராம அபிவிருத்திசங்கம் 02) இருபாலைதெற்கு கிராமசக்திமக்கள் சங்கம் 03) வடமாகாணசபை கெளரவ அவைத்தலைவர் 04) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் 05) மக்கள் ஆதரவுமையம் 06) உதயம் கலாச்சார சங்கம்(கனடா)ஆகியோர் பங்களிப்பினை செய்திருந்தனர்.
இவ் உலர் உணவுப் பொருட்களை எமது பிரதேசத்தின் ஒவ்வொரு பொது அமைப்புக்கள் ஊடாக வழங்கப்பட்டது.அதன்படி,01)ஆனந்தபுரம் கிராமத்திற்கு கலைவாணி சனசமூகநிலையத்தின் தரவுகளின்படி குடும்பங்கள்02) ஞானவைரவர் கோயிலடி கிராமத்திற்கு ஞானஒளிசனசமூகநிலைய தரவுகளின்படி 03) புதியசெம்மணிவீதிப் பிரதேசத்திற்கு இருபாலைதெற்கு மாதர்சங்கதரவுகளின்படி 04) கட்டப்பிராய் பிரதேசத்திற்கு கலைமணிசனசமூகநிலைய தரவுகளின்படி 05) வேளாதோப்பு, சிங்கராஜர்வீதிப் பிரதேசங்களிற்கு இருபாலைதெற்கு கிராம அபிவிருத்திசங்க தரவுகளின்படி 06) விநாயகர்வீதிப்பிரதேசத்திற்கு இருபாலைதெற்கு கிராம அபிவிருத்திசங்க தரவுகளின்படி 07) நாயன்மார்கட்டு பிரதேசம் இருபாலை தெற்கு கிராமசக்தி மக்கள் சங்கத்தின் தரவுகளின்படி
என மொத்தமாக ஏராளமான குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இவ் உலர் உணவுப்பொருட்கள் அனைத்தும் அவர்களது பிரதேசங்களில் உரிய சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய வழங்கப்பட்டது.
இருபாலைதெற்கு கிராம அபிவிருத்தி சங்கதலைவர் திரு.பாக்கியராசா பிரதீபன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிராம அபிவிருத்தி சங்க உபசெயலாளரும்,விவசாயசம்மேளனத்தலைவரும் ஆகிய திரு.தவராஜா தர்சன், பொருளாளர் திரு.செல்வராஜா வசந்தகுமாரன்,உறுப்பினர் திரு.நடேசபிள்ளை கஜேந்திரகுமார்,மற்றும் வேல்முருகன் விளையாட்டுக்கழக தலைவர் திரு.தங்கராஜா சர்மிளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடரும் ஊரடங்கு சட்டம் காரணமாக உலர்உணவுப்பொருட்களை பெறுவதில் மிகுந்த கஸ்டங்கள் நிலவி வரும்நிலையில் தொடர்ந்து ம் பொருட்களை வழங்கிவரும் கல்வியன்காடு ரூபன் களஞ்சிய உரிமையாளருக்கும் , பணியாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
ஊரடங்கு வேளையில் கல்வியன்காட்டில் இருந்து பொருட்களை பொதிசெய்யும் இடத்திற்கு கொண்டு வர உதவிகோரியபோது தாமேநேரில்வந்து பொருட்களை ஏற்றி தந்த வலிகிழக்கு பிரதேசசபையின் கெளரவ தவிசாளர் திரு.தியாகராஜா நிரோஷ் அவர்களுக்கும்,பொதிசெய்யப்பட்ட பொருட்களை ஒவ்வொருபிரதேசங்களுக்கும் கொண்டு செல்ல தனது சொந்தவாகனத்தை தந்துதவிய எமது கிராம அபவிருத்தி சங்க உறுப்பினர் திரு.நடேசபிள்ளை கஜேந்திரகுமாருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.எமது இவ்வாறான பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பை நல்கிவரும் பிரதேசமக்கள் பிரதிநிதிகளுக்கும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும், சமூக நிறுவனங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவிப்பதோடு எமது இச்சேவை தொடரவுள்ளது. பாதிக்கப்பட்டு உதவிகள் எதுவும் இல்லாது அல்லல்படும் குடும்பங்களுக்கு உதவிட காத்திருக்கின்றோம்.அந்தவகையில் எமது பிரதேசத்தில் உள்ள ஆலயங்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின் நிதிப்பங்களிப்பினை பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
தன்னார்வ கொடையாளர்கள்,சமூக நிறுவனங்களின் தொடர்ச்சியான பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம்.அனைவரும் இணைந்து கொடியவைரஸ் தாக்கத்தினை இல்லாதொழிப்பதோடு,பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கும் உதவுவோம்.”காலத்தில் செய்யும் உதவிகள் சிறிதாகினும் ஞாலத்தில் மாணப்பெரிது” ,””உடலால் பிரிந்து இருப்போம் ” , “உள்ளத்தால் இணைந்து இருப்போம் ” , “தானம் தயங்காமல் செய்ய முன் வாருங்கள் ” , ” உதவி செய்ய இந்த நேரத்தில் பணம் தடைஇல்லை ” , ” நன்றி.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org