திரு.சோமநாதன் பாலசுப்பிரமணியம்

திரு.சோமநாதன் பாலசுப்பிரமணியம்
கண்ணீர் அஞ்சலி
திரு.சோமநாதன் பாலசுப்பிரமணியம் (பாலா, தவயோகநாதன்) (இளைப்பாறிய எழுதுவினைஞர், மாகாணக் கல்வித் திணைக்களம், திட்டமிடல் அலுவலர் மாநகர சுகாதாரப் பிரிவு)
இணுவில் மேற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும் புலவனார் வீதி, கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சோமநாதன் பாலசுப்பிரமணியம் நேற்று (04.12.2021) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமநாதன் யோகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும், விஜயமலரின் (பத்து) பாசமிகு கணவரும், அசோக் (லண்டன்), அஜித் (கனடா), அஜந் (கோப்பாய்), அருண் (கனடா), அஜீவ் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகர்ணா (கனடா), சதீஸ்வரி (கோப்பாய்), வினுஜா (கனடா), பிரார்த்தனா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், கனடாவை வதிவிடமாகக் கொண்ட அஜினா, சியான், அஸ்வினா, அகேனா, ஆருத்ரா, அப்சரா, அர்ஜீன் மற்றும் இலங்கையை வசிப்பிடமாகக் கொண்ட பிரவீன், பிரவீனா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும், தவமலர் (மணி – லண்டன்), தவலங்காமலர் (பவா – ஜேர்மனி) , தவநேருமலர் (கிச்சி – கனடா), தவலங்கைநாதன் (சிவா – இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், கிருஷ்ணபிள்ளை மற்றும் இராஜேந்திரம் (கனடா), Dr. தங்கராஜா (லண்டன்), காலஞ்சென்ற துரைசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் 05.12.2021 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (575)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத தாய்க்கு உதவி வழங்கப்பட்டமை
சிவன் முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை
யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டமை
செட்டித்தெரு மெதடிஸ் பாடசாலை மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
சிவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு நிவேதனம் வழங்கப்பட்டமை
தொழில் முயற்சிக்கான உதவி வழங்கியமை
சிவன் முதியோர் இல்லத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடைபெற்றமை
மாணவியின் கலைத்துறை மேம்பாட்டுதலுக்காக வயலின் வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு அமைத்துக் கொடுத்தமை
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org