அந்தியேட்டி ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடு கிளிநொச்சியில் கனடாவில் வசிக்கும் சகோதர சகோதரிகளினால் வழங்கப்பட்டது.
அந்தியேட்டி ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடு கிளிநொச்சியில் கனடாவில் வசிக்கும் சகோதர சகோதரிகளினால் வழங்கப்பட்டது.
“அவனுக்குத் தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும் , அட யாருக்கம்மாபுரியும் அவன் வேடிக்கையும் அதன் விளைவும்..”
சந்திரன் மாமாவுக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடல் வரிகள் தான் அவரை இழந்து வருந்தும் எம் எல்லோர் மனத்திலும் இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதரின் நாடி நரம்புகளிலும் ஓடுவது குருதியென்றால் , சந்திரன் மாமாவின் நாடி நரம்புகளில் மேலதிகமாக ஓடுவது நேர்மை, அன்பு, தைரியம் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்குத் தெரியாத ஒரு விடயமும் இல்லை.
தொழில் நுட்பத்திலும் உலக அரசியலிலும் அவருக்குள்ள அறிவும் திறமையும் பலரையும் வியக்க வைத்துள்ளது. நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் எங்களால் நீங்கள் பெருமைப்படுவதாக, ஆனால் காலத்தை வென்று காவியமாகிய எங்கள் சந்திரன் மாமா ஓயாது உழைப்பதில் சூரியன் என்றும் அவரை நேசிக்கும் அவரின் அன்புக்குரிய ஒவ்வொருவர் வீட்டிலும் அவர் முழுமதிச் சந்திரனாக என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றும் கூறிக்கொள்வதில் மருமக்களாகிய நாங்கள் இன்று பெருமிதம் கொள்கிறோம்.




















All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org