அமரர்.பாக்கியம் இரத்தினம்
அமரர்.பாக்கியம் இரத்தினம்
கண்ணீர் அஞ்சலி
நல்லூர்வடக்கு சந்திரசேகரப்பகள்ளையார் கோவிலடியை சேர்ந்த அமரர்.பாக்கியம் இரத்தினம் அவர்கள் அவரது 90வது வயதில் நத்தார் தினத்தன்று சிவபதமடைந்தமையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் ஊரின் மூத்தவரும்,குடும்பத்தின் ஒளிவிளக்காகத்திகழ்தவரும் ஆகிய தெய்வத்திருமாட்டி அவர்கள் ஸ்ரீமஹா சந்திரசேகரப்பிள்ளையார் மீதுமிகுந்த பக்திமிக்கவர்.தமது பிள்ளைகள்,பேரப்பிள்ளைகளை பாசத்துடனும்,பரவுடனும் வளர்த்தெடுத்து அன்பு காட்டிவருபவர்.இவ்வருட
நல்லைக்கந்தன் இரதோற்சவநாளன்று நேரடியாக ஆலயத்திற்கு சென்றுவழிபட்டமையை கண்ணுற்றோம்.
இவ்வாறாக தன்னம்பிக்கையும்,ஆளுமையும் கொண்ட அவரது வாழ்க்கை எமக்கு வழிகாட்டி நிற்கின்றது. ஊரவர்களின் அனைத்துநிகழ்விலும் கலந்துகொண்டு அனைவரோடும் அன்போடும் பண்போடும் பழகும் எங்கள் பாக்கியம் அம்மாவின் பிரிவு வேதனையளிக்கின்றது.
பூட்டப்பிள்ளைகளையும் கண்டு வாழ்வாங்கு வாழ்ந்த அவரது பிரிவுத்துயரில் அவர்தம் குடும்பத்தினருடன் நாமும் இணைந்துகொள்கின்றோம்.
அன்னையின் ஆத்மா இறைவன் திருவடிநிழலில் நித்திய சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி!!! சாந்தி!!! சாந்தி!!!
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (540)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சிறுதொழில் ஆரம்பிக்கப்பட்டமை
வீடருகே கடையமைத்து கொடுத்து நிரந்தர தொழில் வாய்ப்பு உருவாக்கியமை
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org