திருமதி.சிவபாக்கியம் மாணிக்கவாசகர்

திருமதி.சிவபாக்கியம் மாணிக்கவாசகர்
கண்ணீர் அஞ்சலி
வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,கொழும்பினை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுநிலை அதிபர் திருமதி.சிவபாக்கியம் மாணிக்கவாசகர் (சின்னக்கிளி ரிச்சர்) அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதனை மிக்க துயரோடு அறியத் தருகின்றோம்….
இவர் மாணிக்கவாசகர்(ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் மனைவியும், இளந்திரையன்(Doctor-Norway), இளஞ்செழியன்(மேல் நீதிமன்ற நீதிபதி-வவுனியா), சிவகெளரி(ஆசிரியர்-CANADA), இளம்பிறையன்(விரிவுரையாளர்-யாழ்.பல்கலைக் கழகம்), இளங்குமரன்(இளங்கோ-வானொலிக் கலைஞர்-TIME FM RADIO,CANADA) ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கொழும்பில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஞாயிறு முழு நாளும் கொக்குவில் மேற்கு கேணியடியில் உள்ள அவரது மகன் மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்களின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. 18.09.2023 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இறுதிக்கிரியைகளின்பின் , பூதவுடல் அன்னாரது சொந்த ஊரான வேலணைக்கு எடுத்து செல்லப்பட்டு, சாட்டி இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும். இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் :-குடும்பத்தினர்
All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org