திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை

திருகோணமலையை சேர்ந்த திரு திருமதி நித்தியானந்தன் குடும்பத்தினர்களுக்கு நன்றி.

இந்த அம்மாவின் நிலைமையை அறிந்தவுடன் அவருக்கு தையல் தெரிந்த படியால் நிரந்தர வருமானம் வரக்கூடிய சிறு தொழில் செய்வற்கு தையல் மெசின் வாங்கி உதயம் கனடா ஊடாக வழங்கி வைத்தார்கள்.

இந்த தருணத்தில் கனடாவிலிருந்து வருகைதந்த உதயம் கனடா செயலாளரும் , யாழ் உதயம் கனடா பிரதிநிதியும் , மூதூர் உதயம் கனடா பிரதிநிதியும் நேரில் சென்று இந்த குடும்பத்திற்கு தையல் மெசினை சில சிரமங்களை கடந்து வழங்கினார்கள்.

மூதூரில் இருந்து இந்த கிராமத்துக்கு பயணம் செய்யும் போது யானைகாட்டின் ஊடாகதான் போகும்போது இடை இடையே யானை நின்று இருந்ததை பார்த்து அச்சத்துடன் கடந்து போனார்கள் . அண்மையில் இந்த குடும்ப தலைவரை யானை அடித்து கொன்றது தெரிந்ததே.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org