உதயம் கனடா நிகழ்வு

உதயம் கனடா 🇨🇦 2024 / December 01 நடந்தேறிய விழா. தமிழன் பத்திரிகையில்….

கல்வி- நிலம் மேப்படும் போது குடும்பம் சிறக்கும் என்ற அடிப்படையில் உதவிகரம் நீட்டுகின்றோம்:

கல்வி, நிலம் மேம்படும் போது குடும்பம் சிறக்கும் என்ற அடிப்படையில் உதவிகரம் நீட்டுகின்றோம் என உதயம் கனடா அமைப்பின் தலைவர் இராமகிருஸ்ணன் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற உதயம் கனடா அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கெளரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது இந்த அமைப்பானது 2011 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஒரு நிர்வாக சபையால் விதைக்கப்பட்டு விதையாகி இன்று விருட்சமாய் வளர்ந்து பல இன மக்களுக்கு நிழலாய் இருப்பதுடன், இம்மரம் வளர்ந்து செழிப்பதற்கு உதவிய அனைத்து பங்காளிகளையும் பாராட்டி நன்றி கூறுகின்ற நாளாக உள்ளது.

இந்த அமைப்பு வளர்ந்த பாதை இலகுவானதல்ல. எத்தனையோ சவால்களையும், தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக இந்த நிலையை அடைந்திருக்கின்றார்கள். இத்துடன், நின்று விடப்போவதில்லை. இன்னும் வெகுதூரம் பயணித்து அவர்களது இலக்கை அடைவதற்காக எனது தலைமையின் கீழ் இதை எட்டுவதற்கு சகல வளங்களயும் ஒருங்கிணைப்பேன் என உறுதி செய்வதோடு அதற்கான ஒத்துழைப்பை நீங்கள் அனைவரும் வழங்குவீர்கள் என உறுதியாய் நம்புகின்றேன்.

எங்கள் சேவைகளையும், சாதனைகளையும் பட்டியலிட நேரம் போதாது. ஆனால் நாங்கள் வழங்கி வருகின்ற உதவிகளையும், அதன் விளைவுகளையும் சகலரும் அறிந்ததே. எமது மக்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு இருந்த போது நாம் பல விதமான உதவிகளை வழங்கி அவர்களது மறு வாழ்விற்காக ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

இதற்கு உதாரணமாக மலையாளபுரத்தில் உள்ள அநாதை குழந்தைகள் இல்லம் நல்ல உதாரணமாகும். சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அநாதை குழந்தைகளை பராமரித்து அவர்கள் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைப்பதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி வருகின்றோம். இதுமட்டுமல்லாமல், பல மாவட்டங்களில் உள்ள வறுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், உதவி செய்வதுடன், சிறு வியாபாரம் செய்யும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி செய்து வருகின்றோம்.

கல்வி நிலம் மேப்படும் போது குடும்பம் சிறக்கும் என்பது எமது குறிக்கோளாகும். இவை அனைத்திற்கும் பல வழிகளிலும் உதவிய, நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி. இந்த ஒத்துழைப்பு இனியும் பன்மடக்கு கிடைக்குமென நன்றியுடன் எதிர்பார்க்கின்றேன்.

இறுதியாக இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு உதவிய அனைத்து அங்கத்தவர்களுக்கும் நன்றி. பல வழிகளில் என்னோடு தோள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி. பாடல் குழாம் மற்றும் இசைக்கு குழுவினருக்கு நன்றி.

முக்கியமாக எமது வேண்டுகோளை ஏற்று நிதி வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள். அறுசுவையான உணவு தயாரிப்புக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. அரங்கிலே பல வழிகளிலும் உதவியவர்களுக்கு எனறும் பாராட்டுகளும் நன்றிகளும். வேறுவகையில் உதவியவர்களுக்கும் நன்றி கூற மறந்திருந்தால் எனது மன்னிப்பை கோருகிறேன்.

இன்றைய பொழுதை இனிதாக களித்து இருப்பீர்கள் என்ற நம்பிக்கை யோடு நாளைய பொழுது இனிதே அமைய வாழ்த்துக்கூறி எனது உரையை முடிக்கின்றேன். எனத்தெரிவித்தார். ( உதயம் கனடா வவுனியா பிரதிநிதிக்கு நன்றி )

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org