புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட இருபாலை தெற்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட இருபாலை தெற்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஐந்தாம் கட்டமாக புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட இருபாலை தெற்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
டிசம்பர் 25, 2020 – யாழ்ப்பாணம்.
இருபாலை தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், கனடா உதயம் கலாச்சார நிறுவனத்தின் அனுசரனையுடன் , மக்கள் ஆதரவு மைத்தின் உதவியுனும் நத்தார் பண்டிகை தினமான இன்று (25) வெள்ளிக்கிழமை புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு கல்வி உபகரணங்கள் பகுதி பகுதியாக வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு இருபாலை தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க பொது மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. பா. பிரதீபன் அவர்களின் தலைமையில் சுகாதார நடைமுறைகளிற்கு அமைவாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதயம் கலாசார நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.தி.நிஷாங்கன், கிராம சக்தி மக்கள் சங்கத்தின் தலைவர் திரு.மு.தவசீலன், மாதர் சங்கத்தின் தலைவி திருமதி.த. சரோஜாதேவி, பிரதேச சபை உறுப்பினர் திரு ந. கஜேந்திரகுமார், மக்கள் ஆதரவு மையம் அமைப்பாளர் S. சுரேந்திரன், கமக்காரர் அமைப்பின் தலைவர் திரு த. தர்சன் , கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு ப. ருசியந்தன், பொருளாளர் திரு .செ.வசந்தகுமார், சமூகசேவையாளர்,சிரேஷ்ட உறுப்பினர் திரு.சோ.சந்திரகுமார், ஜப்னா மின்னல் ஊடக சமூகசேவையாளர் தலைவர் திரு.த.சாமிலன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வினை ஒழுங்கமைப்பு செய்வதற்கு பூரண ஆதரவு நல்கிய உதயம் கனடா அமைப்பின் பொருளாளர் திரு. மு.சுந்தரலிங்கம் அவர்களுக்கு பொதுஅமைப்புக்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (541)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சிறுதொழில் ஆரம்பிக்கப்பட்டமை
வீடருகே கடையமைத்து கொடுத்து நிரந்தர தொழில் வாய்ப்பு உருவாக்கியமை
+16473030199
Info@udyamcanada.org